ஆனால் கபில்தேவ் நடத்திய சி.சி.எல். அமைப்பில் சேர்ந்து விளையாடிய பிறகு, அர்ஷத் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படவில்லை.
இதனால் வறுமையில் வாடிய அர்ஷத் தற்போது ஆஸ்திரேலியாவில் உபேர் நிறுவனத்திற்கு சொந்தமான வாடகை காரை ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த கணேஷ் என்பவர், சிட்னியில் உபேர் கால் டாக்சியில் சென்ற போது, எதிர்பாராத விதமாக தான் அமர்ந்திருக்கும் காரை ஓட்டுவது அர்ஷத் கான் என்பதை கண்டுபிடித்துள்ளார். இதை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததால், மீண்டும் செய்திகளில் தலைப்பு செய்தியாகியுள்ளார் அர்ஷத் கான்.