தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு நடாத்தப்படும் பகுதி நேர வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கால வரையரையில் திருத்தம் மேற்கொள்வதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
முன்னதாக பரீட்சை நடைபெறுவதற்கு 5 தினங்கள் இருக்கும் போது பகுதி நேர வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்து.
எவ்வாறாயினும் அமைச்சரின் ஆலோசனைக்கமைய இந்த கால எல்லை 3 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு 3 நாட்கள் இருக்கும் போதே பகுதி நேர வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாப்பத்திரங்கள் விநியோகித்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
Aug 13, 2015
ஐந்திலிருந்து மூன்றாக குறைத்தார் கல்வியமைச்சர் அகில
Posted by AliffAlerts on 01:20 in NL | Comments : 0