BREAKING NEWS

Apr 17, 2015

மலேசிய UCTS பல்கலைக்கழக முகாமைத்துவ குழு - அமைச்சர் றிசாத் சந்திப்பு



இர்ஷாத் றஹ்மத்துல்லா 

மலேசியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் (UCTS) பல்கலைக்கழக முகாமைத்துவ குழுவினர் இன்று கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.

மலேசிய குழுவிற்கு இந்தியா  ETA நிறுவனத்தின் பொது முகமையாளர் அகமத் றிபாய் தலைமை தாங்கினார்.

மலேசியாவில் இயங்கிவரும் University College Of Technology Sarawak பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரம் கல்வி செயற்பாடு தொடர்பில் அமைச்சருக்கு பிரதி நிதிகள் எடுத்துரைத்தனர். அதே வேளை உயர்கல்வி தொடர்பில் இலங்கை மாணவர்களை உள்வாங்குவதற்கு இந்த பல்கலைக்கழகம் தயாராகவுள்ளதாக அமைச்சரிடத்தில பல்கலைக்கழக முகாமைத்துவம் தெரிவித்தது.இது வரைக்கும் 700 பேர் கல்வி பயிலுவதாகவும்,இலங்கையில் இருந்து 100 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளவுள்ளதாகவும் மேலும் இவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாக தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் எதிர்காலத்தில்  மேலும் மாணவர்கள் மலேசியாவில் பல்துறை கற்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கவுள்ளதாகவும் கூறினார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னால் முஸ்லிம் சேவை பொறுப்பாளர் எம்.இஸட் அகமட் முனவ்வர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &