اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان என்று வரும் துஆ மிகவும் பலவீனமான ஹதீஸில் உள்ளது , அதனால் இஸ்லாத்தில் இதுபோன்ற துஆக்களை வணக்கமாக எடுத்து ஓதுவது அனுமதிக்கப்பட்ட ஒன்றல்ல .
மேலும் ' ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஅபான் எனது மாதம், ரமழான் எனது உம்மத்தின் மாதம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் இந்தக் காலங்களில் எமது மிம்பர் மேடைகளிலும் அதிர்வதனை அவதானிக்கலாம். உண்மையில் ரஜப் மாதத்தில் எந்த விதமான விஷேட தொழுகைகளோ, விஷேட நோன்போ கிடையாது என்பதே நல்வழி நடந்த உலமாக்களின் வழிகாட்டளாகும்.
அவ்வாறே ரஜப் மாதத்தில் தான் நபியவர்களிள் மிஃராஜ் பயணம் நடந்தது என்ற செய்தியும் ஆதாரம் அற்ற செய்தியாகும்.
எனவே இவற்றை தவிர்த்து தெளிவான ஆதாரங்கள் உள்ளவற்றை மாத்திரம் அமல் செய்வோம் .