BREAKING NEWS

Apr 1, 2015

ஜேர்மன்விங்ஸ் விபத்து: விமானத்திள் பதிவு செய்யப்பட்ட காணொளி கிடைத்தது [VIDEO]













அண்மையில் விபத்துக்குள்ளான 'ஜேர்மன்விங்ஸ்' விமானத்தின் உள்ளிருந்து பதிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் காணொளியொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையடக்கத் தொலைபேசியொன்றினூடாக பதிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் இக் காணொளி தம்மிடம் உள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் இரண்டு தெரிவித்துள்ளன.

பிரான்ஸ் நாட்டு ஊடகமான 'பெரிஸ் மெட்ச்' மற்றும் ஜேர்மனி நாட்டு ஊடகமான 'பில்ட்' என்பனவே இவ் அறிவிப்பை மேற்கொண்டுள்ளன.

குறித்த காணொளியை தாம் பார்வையிட்டதாகவும் , விபத்து நடந்த இட த்தில் இருந்த ஒருவரின் ஊடாக இதனைப் பெற்றுக்கொண்ட தாகவும் 'பெரிஸ் மெட்ச்' தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணித்தோர் பயத்தில் அலறுவதும், அவர்கள் தமக்கு நடக்கப்போவது தொடர்பில் அவதானத்துடன் இருந்தமையும் காணொளியை பார்க்கும் போது தெளிவாகுவதாக 'பெரிஸ் மெட்ச்' சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இறுதியில் விமானம் மோதும் சத்தமும் , அத்தோடு அலறல் சத்தம் அதிகரிப்பதும் தெளிவாக கேட்பதுடன் காணொளி நிறைவடைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதோ அந்த வீடியோ..

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &