பயங்கரவாதிகள் கையில் சிக்கி தவிக்கும் லிபியாவில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், அகதிகளாக படகுகள் மூலம் ஆபத்தான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
அந்தவகையில், கடந்த செவ்வாய் அன்று இத்தாலி நோக்கி 100க்கும் மேற்பட்ட அகதிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. மத்திய தரைக்கடலின் வட பகுதியில் படகு சென்றுகொண்டிருந்தபோது, அந்த படகில் இருந்த ஐவரிகோஸ்ட்,மாலி மற்றும் செனேகல் நாட்டை 15 பேர், 12 கிறிஸ்தவர்களை வலுக்கட்டாயமாக கடலில் பிடித்து தள்ளியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவல் அறிந்த இத்தாலிய கப்பற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படகை நடுக்கடலில் மடக்கி நிறுத்திய கப்பற்படையினர், கிறிஸ்தவர்களை கடலில் தள்ளிய 15 பேரைக் கைது செய்தனர்.
பின்னர் மற்ற அகதிகள் மற்றொரு கப்பல் மூலமாக பத்திரமாக அருகில் இருந்த சிசிலி தீவின் பலர்மோ நகருக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். கைது செய்யப்பட்ட 15 பேரும் இஸ்லாமியர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.