எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையினால் சவுதி அரபியாவின் அல் கப்ஜி தஃவா நிலையம் 24-10-2014 அன்று ஏற்பாடு செய்த வினோத சுற்றுளா மற்றும் பரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளில் தமிழ் மற்றும் சிங்களம் பேசக் கூடிய எறாளமான மக்கள் மேற்படி நிகழ்வில் பங்கு கொண்டு தங்களுக்குள் அன்பையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தினர்.
கயிரு இலுத்தல், சாக்கோட்டம், கனா முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், பலூன் உடைத்தல், முட்டை எறிதல் என பல விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்று இறுதியில் அல் கப்ஜி தஃவா நிலைய தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு பொருப்பாளர் அஷ்ஷெய்க் றிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்களின் சிங்கள மொழி மூலமான உரை இடம் பெற்றது.
அதில் அவர் இனங்களுக்கு மத்தியல் சக வாழ்வு தொடர்பாகவும் இலங்கையில் அன்மைக்காலமாக ஏற்பட்டுள்ள இன முறன்பாடுகள் மீண்டும் எமது தாய் நாட்டை ஒரு யுத்தத்திற்கு கொண்டு செல்ல நாம் அனைவரும் இடமளிக்க கூடாது என்பதனையும் இஸ்லாமிய மார்கம் மாற்று மத அன்பர்களோடு எந்த அளவு மனித நேயத்துடன் நடந்து கொள்கின்றது என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்நிகழ்வில் பேசிய மாற்று மத அன்பர் ஒருவர் தான் ஒரு சிங்கள பௌத்தானாக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்துடன் மிகவும் அன்போடு நடந்து கொள்வதாகவும் தான் 17 வருடங்களாக சவுதி அரேபியாவின் அல் கப்ஜி நாகரில் பணிபுரிவதாகவும் தனக்கு அதிகமான முஸ்லிம்களின் உதவிகள் அவ்வப்போது கிடைத்திருப்பதாகவும் தனவு உரையில் சுட்டிக்காட்டினார்.
ஈட்ரில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு மற்றும் இரப் போசனம் பரிமாறப்பட்டு நிகழ்வுகள் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
விளையாட்டு நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்சி அடைகின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பணிகளை பொருந்திக் கொள்வானாக!
As- Sheikh M.Riskhan Musteen (Salafy/Madani)
தகவல்: அபூ தர்வேஷ்
As- Sheikh M.Riskhan Musteen (Salafy/Madani)