பிரமாண்டமான இப்பிரபஞ்சத்தில் பல்வேறுபட்ட நாட்டினர்இஇனத்தினர்இமொழியினர் வாழ்கிறார்கள்.இவர்களுக்கு மத்தியில் ஆங்கிள வருடக்கணிப்பு அரபு வருடக்கணிப்பு தமிழ் வருடக் கணிப்பு தெலுங்கு வருடக் கணிப்பு என பல்வேறுபட்ட வருடப் கனிப்புகள் நடைமுறையில் உள்ளன.அதில் பெரும்பாலோனோர் சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே வருடக் கணிப்புகளை அமைத்துள்ளனர்.முஸ்லிம்கள் சந்திரனின் வளர்வு தேய்வை அடிப்படையாகக் கொண்டு வருடக் கணிப்பை தீர்மாணிக்கின்றனர்.ஆயினும் அனைவரிடமும் 12 மாதங்களைக் கொண்டது ஒரு வருடம் என்பதில் கருத்து வேறுபாடில்லை.இச்செய்தியானது பின்வரும் இறைவசனத்தை உண்மைபடுத்துவதாகவும்இஇஸ்லாம் இறைமார்க்கம் என்பதட்கு சான்று பகர்வதாகவும் அமைந்துள்ளது.
‘வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை’ அல்குர்ஆன் (9:36)
குறிப்பு:- அவை துல்கஃதாஇ துல்ஹஜ்இ முஹர்ரம்இ ரஜப் ஆகிய 4 மாதங்களாகும்.
இருதித் தூதர் முஹம்மத் ﷺ அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிட்கு ஹிஜ்ரத் சென்ற ஆண்டை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் வருடக் கணிப்பீடு கணக்கிடப் படிகிறது. எனவேதான் ஹிஜ்ரி ஆண்டு என்ற பெயரும் இஸ்லாமிய ஆண்டுக்கு வந்தது.அல்லாஹ்வுடைய அருளால் முஸ்லிம்களான நாம் இன்னும் ஓரிரு தினங்களில் ஹிஜ்ரி 1436 நுழைய இருக்கிறோம்.ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் புணிதமிக்க முஹர்ரம் மாதமாகும்.இதன் புணிதத்திட்கு பின்வரும் நபிமொழிகள் சாட்சி கூருகின்றன.
‘(முஹர்ரம் மாதத்தின்) ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபிகளார் ﷺ அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. நூல்: புகாரி(2006)
‘நோன்புகளில் ரமலானுக்குப் பின் மிகவும் சிறப்பான நோன்பு (ஸஹ்ருல்லாஹ்) அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்’ என்று நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்
‘முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா)நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன் என நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள்.’ நூல்: முஸ்லிம்(1976)
‘நபிகளார் ﷺ அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்குஇ ‘அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும்’ என்றார்கள். நூல்: முஸ்லிம் (1977)
ஆஷூரா நோன்பு
நபி ﷺ அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். ‘இது மாபெரும் நாள்! நபி மூஸா (அலை) அவர்களை இந்த நாளில்தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவேஇ மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்’ என்று யூதர்கள் கூறினார்கள். அதற்கு நபி ﷺ அவர்கள்இ ‘நான் உங்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன்’ என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்றுஇ தம் தோழர்களையும் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டார்கள். நூல்: புகாரி(3397)
இந்த ஹதீஸின் ஊடாக ஆஷூராவுடைய நோன்பு ஃபர்ழான நோன்பு போன்று விளங்கினாலும் பின்வரும் ஹதீஸ்களினூடாக இது ஸுன்னத்தான நோன்புதான் என்பதை விளங்கலாம்.
‘அறியாமைக்கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது! நபி ﷺ அவர்கள்இ ‘நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டுவிடலாம்’ எனக் கூறினார்கள். நூல்: முஸ்லிம் (1901)
ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஃஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கியபோதுஇ ”யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோஇ அவர் அதை விட்டுவிடட்டும்” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி(1592)
யூதர்களுக்கு மாறு செய்தல்
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்றுஇ நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள் ‘(அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?’ என்று வினவினர். அதற்கு நபி ﷺ இ ‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால்இ அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் மரணித்து விட்டார்கள்.மற்றொரு அறிவிப்பில்இ ‘அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால்இ ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன்’ என்று கூறியதாக வந்துள்ளது. நூல்: முஸ்லிம் (1916, 1917)
அமைதியை நாடும் மாதம்
மேலே கிறிப்பிட்ட 9:36 இறைவசனத்தின் அடிப்படையில் தற்காப்புக்காகவே அன்றி சண்டை சச்சரவுகளில் ஏடுபடுவதை இம்மாத்தில் இஸ்லாம் தடுக்கிறது.இந்த வசனமானது சாதாரண குடும்ப சண்டைகள் முதல் ஆட்சிப் போர் வரைக்கும் அனைத்தையும் குறிக்கும் ஒரு வசனமாகவே காணப் படுகிறது.எனவே புதுவருடாமாகிய முதல் மாத முஹர்ரம் மாதத்தில் காலெடுத்து வைக்கும் நாம் அமைதியான வாழ்வை விரும்பியவர்களாகவும்இ சண்டை சச்சரவுகளை வெருத்தவர்களாகவும் இப்புணித மாதத்தில் நுழைய வேண்டும்.இதுவே முஸ்லிம்களிடம் முஹர்ரம் எதிர்பார்க்கும் முக்கிய அம்சமாகும்.
குறிப்பு:- முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் என்னால் முடிந்தளவு சுருக்கமாக இங்கு முன் வைத்துள்ளேன்.இப்புணித மாதத்தின் புணித்ததை பாழ்படுத்தும் விதத்திலும் நம் சமுதாயத்தில் ஆங்காங்கே சில காரியங்கள் கர்பலாவின் பெயரால் நடந்தேருகின்றன. இன்ஷா அல்லாஹ் (2-3 தினங்களில்) அடுத்த தொடரில் அவை பற்றி பார்ப்போம்.
வல்லவன் அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக.
ஃபாமிலா அப்துல் றஹீம்
இன்ஷா அல்லாஹ் தொடரும்….
quote: MadawalaNews