பொதுபல சேனா அமைப்பின் தேரர்கள் இன்று மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே சுமங்கள தேரரை சந்தித்து ஆசி பெற்றனர்.
இதன் போது பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரர் புத்தசாசனத்துக்கு எதிராக நாட்டில் நடக்கும் விட்டயங்களை பல வருடங்களாக தமது அமைப்பு திரட்டிய தயாரித்த அறிக்கை ஒன்றையும் மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே சுமங்கள தேரரிடம் கையளித்தார்.
இதன் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன ஞானசாரருக்கு எதிராக ஒரு பில்லியன் மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஞானசாரர் “சத்த பஹக் தென்னே” ஐந்து சதமும் கொடுக்கமாட்டேன் எல்லா சாட்சியங்களும் எம்மிடம் உள்ளது பார்போம் சிறைக்கு போவது ராஜித்தவா அல்லது நானா என்று “என குறிப்பிட்டார்.