இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் SMS அனுப்பினார்கள் என்று கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களையும் விடுவிப்பதற்கு கடந்த இரு தினங்களாக அயராது பல முயற்சிகளை எடுத்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களுக்கு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சகோதரர் முஸம்மில் தமது நன்றிகளை தெரிவித்தார்.
அமைச்சர் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் இவ் இளைஞர்கள் தொடர்பில் பல கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பயனாக இவ் இளைஞர்கள் இன்று நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும்
மேலும் இவ் வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணியும் ஸூறா கவுன்சிலின் உப தலைவருமான ஸூகைர் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலுக்கும் நன்றிகளை அவர் தெரிவித்தார்