ஈராக், எர்பில் பகுதியில் குர்திஷ் இராணுவத்துக்கு எதிரான அமைப்பின் முன்னெடுப்புகளைத் தடுக்கும் வகையில் இரண்டு முக்கிய கேந்திர நிலையங்களில் செயற்பட்டு வந்த ஆட்டிலறி நிலைகளை தலா 225 கிலோ குண்டுகளை வீசி தகர்த்தெறிந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
F18 போர் விமான மூலமே இத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை குர்திஷ் இராணுவம் பின்வாங்கிச் செல்லும் இடங்களிலிருந்து அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களை ISIS அமைப்பு கைப்பற்றி வருவதாகவும் அமெரிக்காவின் இம்முன்னெடுப்பின் பின்னணியில் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.