இந்த வைரஸ் தொற்று தொடர்பில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகின்றது.
இதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகள் வைத்திருந்தவர்கள் மீது பயணக் கட்டுப்பாட்டுகள் விதிப்பதும் இந்த அறிவிப்புகளில் ஒன்று.
பாதிக்கப்பட்ட இடங்களில் இன்னும் பெரிய அளவில் மருத்துவ சிகிச்சை முறைகளை விரிவுபடுத்துவதும் இந்த நடவடிக்கைகளில் அடக்கம்.
நான்கு நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எபோலா தொற்று மிக மோசமாக பரவியுள்ளது.
கினி, லைபீரியா மற்றும் சியேரா லியோன் ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இந்த நோயினால் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியாவிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.