காத்தான்குடி நகர சபைப் பிரதேசத்துக்குள் இஸ்ரேல் உற்பத்திகளைப் பகிஷ்கரிப்பதற்கான தீர்மானமொன்றை காத்தான்குடி நகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நகர சபைத் தலைவர் அஸ்வர் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. காஸா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.