
By: Inamullah Masihudeen
முஸ்லிம் மகளிருக்கான ஆடை குறித்து தற்பொழுது அதிகம் பேசப்படுகின்றது, இஸ்லாமிய வரைமுறைகள் பேணி கவர்ச்சியற்ற தளர்ச்சியான ஆடைகளை எந்த நிறத்திலும் அணியலாம், கருப்பு நிறம் கட்டாயம் இல்லை என வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன.
ஆனால், முஸ்லிம் ஆடவருக்கான ஆடைகள் மிகவும் கேவலமாக மார்க்க விழுமியங்களுடன் முரண்படுகின்ற விதத்தில் அமைந்துள்ளதாக முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன, இடுப்புக்குக் கீழான (low waist) டரவுசர்கள், (tight fit) ஷர்டுகள்..(arm cut or short) டி ஷர்டுகள்..(Three quarters) என நவ நாகரீக ஆடைகள்..இளைஞர் மத்தியில் விருப்பத்திற்குரியவையாக மாறி வருகின்றன.
தொழுகையின் பொழுதும் வெளியிடங்களிலும் இடுப்புக்குக் கீழ் உள்ளாடை தெரியுமளவு விலகிச் செல்கின்ற ஆடைகள் குறித்து தற்பொழுது குத்பாக்களிலும் சொல்லப்படுகிறது.
அண்மையில் பிரபல முஸ்லிம் ஆடை விற்பனை தொகுதியோன்றிகுள் சென்று எனக்கும் எனது மகனுக்கும் பெருநாளைக்காக டிரவுசர்கள் எடுக்கச் சென்ற பொழுது (regular cut) ட்ரவுசர் ஒன்றைக் கூட பெற்றுக் கொள்ள முடிய வில்லை.
அவ்வளவுக்கும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தான் அல்லாஹ்வில் நம்பிக்கை வைத்துள்ளதால் காப்புறுதி நிறுவனங்களை நாடுவதில்லை என சொல்லுமளவுக்கு பேணுதலானவர். தனிப்பட்டமுறையில் அவரை குறைகாண முடியாது,ஆனால் தமது இறக்குமதி கொள்வனவு சந்தைப்படுத்தல்
அதிகாரிகளுக்கு அவர் சில அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
அதிகாரிகளுக்கு அவர் சில அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
முஸ்லிம்கள் நாம் இஸ்லாமிய ஆடைகளுக்கான காரண காரியங்கள்,பண்பாட்டு விழுமியங்களை அனுசரித்து ஏனையோருக்கும் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும், உரிய சகல தரப்புக்களும் இது விடயத்தில் கவனம் செலுத்தல் அவசியமாகும்.