BREAKING NEWS

Aug 9, 2014

கோட்டாபய கொழும்பு மாவட்டத்தின் அரசியல் தலைமை பீடத்துக்கு?


பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இந்தக் கொழும்பு பிரதேசத்தை அழகாக கட்டியெழுப்பும் அபிவிருத்திக்கும் அதனை அனுபவிக்கும் மக்களின் பங்குதாரராக மாறுவதற்கும் அவர் உடன் கொழும்பு மாவட்டத்தின் அரசியல் தலைமை பீடத்திடனை ஏற்கவேண்டும். என பகிரங்கமாக வேண்டுகோல் விடுத்தார். அமைச்சர் விமல் வீரவன்ச.

மேற்கண்டவாறு கொழும்பு கோட்டே ராஜகிரிய பிரதேசங்களில் பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட 24 பாதை அபிவிருத்திகளை மக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் விமல் கூறினார்.

இந் நிகழ்வில் பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபயாய ராஜபக்ச, கோட்டே நகர சபைத் தலைவர், சிரேஸ்ட அமைச்சர் பௌசி, பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, கோட்டே ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் ரோகித்த போகல்லாகமே ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தாவது –
இந்த யுத்தத்தை வெண்டெடுப்பதற்கு சேனாதிராஜாவாக ஜனாதிபதி இருந்தாலும் இந்த வெற்றியிணை எடுத்துக் கொடுப்பதற்கு பின் நிண்றவர் கோட்டபாய ராஜபக்ச அவர்கள், அவர்கள் இந்த 5 வருட காலத்தினுள் பாதுகாப்பு அமைச்சின் கிழ் நகர அபிவிருத்தி அமைச்சினைச் சேர்த்து இன்று நாட்டில் இரானுவத்தினரையும் அதில் உள்ள பொறியியல் பீடத்தையும் இணைத்து பல அபிவிருத்தித் திட்டங்களையும் செய்துவருகின்றனர்.

இன்று கொழும்புக்கு வரும் கிராமத்து வாசி கோல்பேசிக்கும் வந்து போகாமல் பத்தரமுல்லை, கோட்டே கொழும்பு 7 போன்ற பிரதேசங்களுக்கும வந்து இயற்கை வளங்களை அனுபவித்து இளைப்பாரும் திட்த்தில் இருந்து போகின்றார்கள். யுத்தம் ஒன்றை நடாந்து 30 வருடம் பின்நோக்கிய இந்த நாட்டை அடுத்த 30 வருடங்களுக்குள் முன்நோக்கிச் செல்லும் திட்டத்தினை பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் மிக வேகமாக முன்னெடுத்துச் செல்கின்றனா.

கொழும்பில் சில எதிர்கட்சி அரசியல்வாதிகள் முடுக்கு முலை வீடமைப்புக்களைக் வைத்துக்கொண்டு அந்த மக்களை நவீனமுறையில் வளப்படுத்தி ஒரு புதிய வாழ்க்கை முறைக்கு கொண்டுவராமல் அப்படியே வைத்துக்கொண்டு தேர்தல் காலங்களில் அரசியல் செய்வதையே விரும்புகின்றனர்.
ஆனால் கோட்டாபேயே ராஜபக்ச அவர்கள் அம்மக்ளது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி அவர்களது சீரானதொரு வாழ்க்கை முறையை கொண்டுவருவதற்கே கொழும்பில் உள்ள 100 முலை முடுக்கு வீடுகளை மாற்றியமைத்து சிரந்த நவீன முறையிலான தொடர்மாடி வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு முயற்சித்து வருகின்றார்.

அது மட்டுமல்ல அவர் நிதியமைச்சு திரைசேரியையும் பாரமெடுத்து திறம்பட நடாத்திக் காட்ட வேண்டும் எனவும் அமைச்சர் விமல் வேண்டுகோல் விடுத்தார்.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &