2020 ஆம் ஆண்டுகளில் கொழும்பு மாவட்டத்தில் சேரிப்புறங்களோ, குடிசைகளோ இருக்காது என பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் 19 இடங்களில் 12 அடுக்கு மாடிகள் கொண்ட குடியிருப்புத் திட்டங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் அமைக்கப்படும் வீடு ஒன்று 400 சதுர அடி பரப்பில் சகல வசதிகளும் கொண்டதாக அமைக்கப்படும்.
இந்தக் குடியிருப்புக்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன என்றும் எதிர்வரும் காலத்தில் 70 ஆயிரம் வீடுகளை அமைக்கும் எண்ணம் அரசுக்கு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.