நாட்டில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற மத விரோத சம்பவங்கள் பற்றிய தொகுப்பு மற்றும் அந்த வன்முறைகளுக்கு தீர்வு பற்றியும் ஆக்கங்கள் அடங்கிய இரு ஆங்கில மொழி நூல்கள் வெளியிடப் பட்டுள்ளது . இந்த இரு நூல்களையும் எம்.ஜ.எம் மொஹிடீன் ஆகியுள்ளார் .
குறித்த நூல்களின் சில பிரதிகள் . இன்று எம்.ஜ.எம் மொஹிடீனினால் கொழும்பு ரொஸமிட் பிலேசில் உள்ள அஸ்ரப் ஹு சைன் வீட்டில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது .
இந்த நூல்கள் ஏற்கனவே முஸ்லிம் சமூக சிவில் அமைப்புக்களுக்கும் முஸ்லிம் அரசியல்வதிக்ளுக்கும் கையளிக்கபபட்டுள்ளன.
கடந்தகாலத்தில் வட கிழக்கு பிரச்சினைகள், முஸ்லிம்கள் வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப் பட்டமை பற்றி பல நூல்களை எழுதியுள்ள எம்.ஜ.எம் மொஹிடீன் வடக்கு , கிழக்கிற்கு வெளியே அண்மைகாலமாக முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்கள் பற்றீ தற்போது இரு நூல்களை ஆங்கிலத்தில் ஆக்கியுள்ளார் .
இது பற்றி அவர் கூறும்போது பல நூல்களை எழுதியும் முஸ்லிம் சமூகத்திற்கு ஒன்றும் நடந்ததாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் வாழப்போகும் முஸ்லிம் சமூகம் எவ்வாறு தமது இருப்பை இந்த நாட்டில் பாதுகாத்துக்கொள்ளப்போகின்றது ? என மொஹிடின் கவலைப்பட்டுக் கொண்டார்.
Anti-muslim riots in Aluthgama and Beruwela என்ற நூலில் அளுத்கம பேருவளையில் நடந்த சம்பவங்கள், 50க்கும் மேற்பட்ட அழிவுகள் மக்களின் அவல நிலை பற்றிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் தம்புள்ள மஸ்ஜித் தாக்குதல் தொடக்கம் பொதுபல சேனாவின் ஹலால் பற்றிய கூட்டங்கள் தேரரினால் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முஸ்லிம் அரசியல்வாதிகளில் நடவடிக்கைகள் ஜனாதிபதிக்கு கலிபா பட்டம் வழங்கியமை மற்றும் 20 வருடத்தில் 3 முஸ்லிம் நாடுகள் 90 பில்லியன் டாலர்களை இலங்கை அரசுக்கு அபிவிருத்திக்கு வழங்கியமை என பல தகவல்கள் நூலில் உள்டக்கப்பட்டுள்ளது.
The road map to resolve Anti-muslim activities என்ற நூல் 100 பக்கங்களைக் கொண்டுள்ளது. பொதுபலசேனா, சிகல உறுமய முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டசம்பவங்கள் ஏற்கனவே நவநீதம்பிள்ளையிடம் கையளித்த அறிக்கை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் முஸ்லிம்களின் சனத்தொகை, பள்ளிவாசல்கள், மத்ரசாக்கள். நிலத் தொடர்புகள் அடங்கிய தகவல்களும் இந் நூலில் அடங்குகின்றன.