இன்று பகல் வேளையில் 59 கிலோகிராம் ஹெரோயின் கண்டி – கடுகஸ்தோட்டை பகுதியில் குருநாகல் வீதியில் உள்ள வத்துவலவில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் சிங்கள ஊடகங்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தி இது.
கண்டி -குருநாகல் வீதியில் உள்ள வத்துவலவில் இருந்து 45 கோடி பெறுமதியான 59 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளது ஹெரோயின் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்ட புதிய நபர் ஒருவராக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து பெரும்தொகை ஹெரோயின் கடத்தி வருபவர்களாக இவ்வளவு காலமும் வெலே சுதா, மற்றும் மொகமட் சித்திக் அறியப்பட்டு வந்த நிலையில்
கடுகஸ்தோட்டை சம்பவத்தில் தொடர்பு பட்டுள்ளது அஹ்மட் சப்ரி தாஜுதீன் (34) என புதியவர் ஒருவர் இனங்காணப்பட்டு உள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.
ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட நான்கு பேரை கைது செய்யததாகவும் இவர்கள் பயணித்த கெப் ரக வாகனமும் கார் ஒன்றும் 27 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இந்த வருடம் 330 கிலோ கைப்பற்றப்பட்டதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.