தேரர் ஒருவருக்கு சொந்தமான 30 லட்சம் பெறுமதியான ஜீப் ஒன்றை தீயிட்டு கொளுத்திய நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நிகவெரட்டிய பதில் நீதவான் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்கேநபரை தாக்கிய தேரரை 2 லட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான நபர் ஒருவரரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த தேரர் தனக்கு சொந்தமான வீடு மற்றும் காணியில் விகாரை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் இந்த தேரரிடம் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி இருவருக்கிடையில் மோதல் ஏற்பட்டதாகவும் அதன்போது தேரர் சந்தேகநபரை தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்பின்னதாக குறித்த நபர் தேரரது ஜீப் மற்றும் ரக்டருக்கு தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
எனினும் ரக்டருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இவ்விடயம் தொடர்பில் இருவரிடம் இருந்தும் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையிலேயே இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.