பொது பலசேனாவின் செயற்பாடுகளால் அரசாங்கத்துக்கு பிரச்சினை என்றால் அதனை நிரூபிக்கும்படி ஜனாதிபதிக்கு சவால் விடுவதாக பொது பலசேனா அமைப்பு இன்று தெரிவித்தது.
கிருலபனையில் அமைந்துள்ள பொது பலசேனா தலைமைக் காரியாலயத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களை ஒழுங்காக கட்டுப்படுத்த முடியாவிட்டால், பொது பலசேனா அதனை செய்யும் என பொது பலசேனா அமைப்பு இன்று தெரிவித்தது.