ஹமாஸ் இயக்கமும் இஸ்ரேலியப் படையினரும் காஸாவில் இன்னுமொரு 72 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
எகிப்தின் தலையீட்டுடன் கொண்டுவரப்பட்ட இந்த யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் இணங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் எந்த விதமான நிபந்தனையும் இன்றி இந்த யுத்த நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் நாமும் எகிப்திற்கு சாதகமான பதிலை வழங்குவோம் என ஹமாஸின் இஸ்ஸத் அல் ராஸிக் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் தற்காலிக யுத்த நிறுத்தமானது காசாவிலுள்ள எமது மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காகவே ஏற்றுக் கொள்ளப்பட்டது என ஹமாஸின் தலைவர் கூறியுள்ளார்.
இதுவரை காஸா மீது இஸ்ரேல் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் சுமார் 2000 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 10000க்கும் அதிமான அப்பாவி மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.