BREAKING NEWS

Aug 11, 2014

தேரர்களின் அழுத்தம்: LAST CHANCE LIGHTING கிளை மூடப்படுகிறது


களுத்துறை பிரதேச முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான இலங்கையின் முன்னணி அலங்கார விளக்கு நிறுவனமான லாஸ்ட் சான்ஸ் நிறுவனத்தினால் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் கடந்த மாதம் மூன்றாம் திகதி ஆரப்பிக்கப்பட்ட மலிவு விற்பனை கிளை நிறுவனம் ஒன்று பிரதேச தேரர்களின் அழுத்தம் காரணமாக, லாஸ்ட் சான்ஸ் நிறுவனத்தின் நிர்வாகம் குறித்த மலிவு விற்பனை நிலையத்தை மூடிவிட உத்தேசித்து அங்கிருந்து தமது நிறுவனத்தின் பொருட்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

குறித்த கிளைக்கு பொறுப்பான முபாரக் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது லாஸ்ட் சான்ஸ் நிறுவனத்திம் காலத்துக்கு காலம் நாட்டின் பல பாகங்களிலும் ஒருவருடம் இரண்டுவருடங்கள் என மலிவு விற்பனை நிலையங்களை திறப்பது வழக்கம்.

அந்த அடிப்படையில் பொரலஸ்கமுவ நகரசபைக்கு சொந்தமான காணி ஒன்றை மாதம் இருபதாயிரம் ரூபா வாடகையில் ஒருவருடத்துக்கு நீடித்து கொள்ளும் புரிந்துணர்வில் நகரசபை தலைவருடன் ஆலோசித்த பின்னர் மூன்று மாதத்துக்கு குத்தகைக்கு எடுத்திருந்த குறித்த காணியை தமது சொந்த செலவிலே துப்பரவும் செய்து சுமார் இருபது லட்சம் ரூபா செலவில் ஷெட் ஒன்றையும் நிர்மாணித்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த மாதம் மூன்றாம் திகதி தமது மலிவு விற்பனை நிலையத்தின் திறப்புவிழா நடத்தி சுமார் இரண்டு மணித்தியாலங்கள் கூட பூர்த்தியாக நிலையில் குறித்த மலிவு விற்பனை நிலையத்தினை மூடும் படி தமக்கு அழுத்தம் வருவதாக தொலைபேசியில் தொடர்ப்புகொண்டு கூறியுள்ளார் பொரலஸ்கமுவ நகரசபை தலைவர்.

இது தொடர்பாக பொரலஸ்கமுவ நகரசபை தலைவரை நேரில் சென்று விசாரித்த குறித்த மலிவு விற்பனை நிலையத்தின் முகாமையாளர் முபாரக் அவர்களுக்கு பிரதேசத்தில் இருக்கும் விகாரையின் பிரதம தேரர் மேதகொடா அம்பேதிஸ்ஸ தமித ஹிமி என்ற தேரர் அழுத்தம் கொடுப்பதால் மலிவு விற்பனை நிலையத்தினை மூடிவிட்டு செல்லும் படி அறிவுருத்தப்பட்டது. நாசகார சக்திகளால் கடைக்கு தீவைக்கப்பட்டால் எமக்கு ஒன்றும் செய்யமுடியாதது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது நிறுவனம் தற்காலிகமாகவே குத்தகைக்கு எடுத்த விடயத்தினை தேரருக்கு விளங்கப்படுதி போட்ட காசுக்காக மூன்று மாதமாவது மலிவு விற்பனை நிலையத்தினை நடத்தும் எண்ணத்தில் சுமார் மூன்று வாரகால முயற்சியில் குறித்த தேரரை சந்தித்த , முபாரக் அவர்களுக்கு தேரரிடம் இருந்து “நீங்கள் தற்காலிகமாக என வந்து எங்கள் இடங்களை பிடித்து கொள்கிறீர்கள் உடனே உங்கள் கடையை மூடிவிட்டு செல்லுங்கள்” என அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அல்லது மலிவு நிலையத்தை நடத்துவதாக இருந்தால் “பொரலஸ்கமுவவில் வீடு கட்ட அனுமதி எடுத்து கட்டிருக்கும் பள்ளியை அகற்றிவிட்டு கடை நடத்துங்கள்” என்று தேரரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  மேலும் இது தொடர்பாக தனது உதவி தேரருடன் கதைத்து விட்டு தொடர்பு கொள்கிறேன் எனவும் கூறி முபாரக் திருப்பியனுப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக முபாரக் அவர்கள் ஜனாதிபதி வரை கடிதம் எழுதியம் பயனற்று போனதாலும் இவர்களின் அழுத்தம் தொடர்ந்ததாலும் தமது பல லட்சம் ரூபா பொருமதியான பொருட்களை பாதுகாத்து கொள்ள தமது நிறுவனத்தினை அப்புறப்படுத்துகிறது லாஸ்ட் சான்ஸ்.

பொரலஸ்கமுவ பள்ளிவாயலை அகற்ற கூறி அழுத்தம் கொடுப்பது மற்றும் பேசன் பக் நிறுவனம் தாக்கப்பட்ட சம்பவம் போன்றவைகளுடன் தொடர்புடையவர் என கூறப்படும் மேதகொடா அம்பேதிஸ்ஸ தமித ஹிமி ஜனாதிபதி ஆலோசகர் என குறித்த லாஸ்ட் சான்ஸ் விடயம் தொடர்பாக தனது விசனத்தை தெரிவித்த மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். - MN

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &