BREAKING NEWS

Jul 28, 2014

மறுபிறவி எடுத்த, கால்பந்து தலையுடன் பிறந்த குழந்தை [VIDEO]


இந்தியாவை சேர்ந்த குழந்தை ஒன்றுக்கு கால்பந்து போல் பெரிதாக இருந்த தலை தற்போது சிகிச்சை செய்யப்பட்டதன் மூலம் சாதாரண நிலைமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திய தலைநகரான புது டெல்லியை சேர்ந்த ரூனா பேகம் (3) என்ற குழந்தை, கடந்த 2013ம் ஆண்டில் மூளையில் தண்ணீருடன் பிறந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இதனை அடுத்து மருத்துவர்கள் பல முறை சிகிச்சை செய்தும் பலனளிக்கவில்லை என்பதால் வீடு திரும்பினர்.

ரூனா பிழைக்க மாட்டார் என அனைவரும் நினைத்திருந்த தருணத்தில் தற்போது சாதாரண நிலைமைக்கு திரும்பியுள்ளார்.

இவரது, தலை சிகிச்சைக்கு பின் 37 அங்குலத்திலிருந்து 23 அங்குலம் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரூனாவின் தந்தை அப்துல் கூறுகையில், எனது மனைவி மிகவும் கவலைப்பட்டார், மற்றவர்கள் அனைவரும் குழந்தையை ஆசிரமத்தில் அனுமதிக்க கூறினர் என்றும், தற்போது, ரூனா மீண்டு வந்தது எங்கள் குடும்பத்தை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &