உலகக்கிண்ண கால்பந்து தொடரில் முதுகில் ஏற்பட்ட காயம் சரியாகி விட்டதால் நட்சத்திர வீரர் நெய்மர் தனது காதலியுடன் கடற்கரையில் நேரத்தை கழித்தார்.
உலகக்கிண்ணப் போட்டியின் போது கொலம்பிய வீரர் தாக்கியதில் நெய்மரின் முதுகெலும்பு முறிந்தது. இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து பிரேசில் அணி உலகக்கிண்ணத்தை தவறவிட்டது மட்டுமல்லாமல் ஜேர்மனி அணியிடம் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது.
பின்னர் உடல் ஓரளவு சரியான நிலையில் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் நெய்மர் தன்னால் முடிந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அதிலும் பிரேசில் கோட்டை விட்டது.
இந்நிலையில் உடல்நிலை சரியான நெய்மர் இடுப்பில் பேண்டேஜ் போட்டவாறு தனது காதலி புருனாவுடன் ஜேர்மனியில் உள்ள ஃபார்மெண்டிரா கடற்கரையில் நேரத்தை செலவிட்டார்.