டோணியின் திறமை தீர்ந்துவிட்டதால் இளம் வயது கோஹ்லியை கேப்டனாக்க வேண்டும் என்று சேப்பல் கூறியுள்ளார். ஏற்கனவே டோணி, கோஹ்லி நடுவே பனிப்போர் இருந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சேப்பல் இதுபோல சிண்டு முடிந்து இந்திய கிரிக்கெட் அணிக்குள் பிளவை ஏற்படுத்த முயன்றுள்ளார்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.