பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இப்தாரில் கலந்துகொள்வதற்காக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் சிவில் சமூகத் தலைவர்கள் விசேட விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வு நேற்று கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டேலொன்றில் பெற்றுள்ளது .
இந்த நிகழ்விற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் முஸ்லிம் சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், முக்கியஸ்தர்கள், உலமாக்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த சுமார் 50 முஸ்லிம் சிவில் சமூகத் தலைவர்களும் இந்த இப்தாரில் கலந்துகொண்டனர். கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே இதில் கலந்துகொண்டுள்ளனர் .
இதன்போது காத்தான்குடி மற்றும் ஏறாவூர் முஸ்லிம் சிவில் அமைப்புக்களினால் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் மத இன விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தும் மகஜர் ஒன்று பாதுகாப்பு செயலாளரிடம் கையளிக்கப் பட்டது