BREAKING NEWS

Jul 26, 2014

சம்பிக்க ரணவக்கவின் அடையாள அட்டையை ஏற்க மறுத்த பேஸ்புக்

பயங்கரவாதி ஞானசார உட்பட பொது பல சேனாவின் சில இனவாதிகளின் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் கணக்குகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சார் சம்பிக்க ரணவக்கவின் பேஸ்புக் கணக்கும் மூடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தாம் பேஸ்புக் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட போது அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தும்படி கோரப்பட்டதாகவும் அதற்காக தாம் இலங்கை பாராளுமன்ற அடையாள அட்டையின் பிரதியை அனுப்பியபோது அதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாகவும் அமைச்சர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அடையாள அட்டையில் ‘கௌரவ’ என்ற அடைமொழியோடு பாட்டாளி சம்பிக்க ரணவக்க என எழுதப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள பேஸ்புக் நிர்வாகம், முதற்பெயரும் குடும்பப்பெயரும் அவரது முடக்கப்பட்ட பேஸ்புக் கணக்கிலிருக்கும் தகவலோடு ஒத்துவரவில்லையென குறிப்பிட்டுள்ளதோடு போலி அடையாள அட்டையைப் பாவிப்பது சட்டப்படி குற்றம் எனவும் பதிலளித்துள்ளதாக அமைச்சரின் ஊடக செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பேஸ்புக் நிர்வாகத்தின் பதிலுக்காக காத்திராது அவர் புதிய கணக்கொண்றை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &