BREAKING NEWS

Jul 27, 2014

ரசிகர்களின் அரவனைப்புத் தொல்லை: பந்துகளை பரிசுகளாக வழங்கினார் ரொட்ரிகஸ்

தனது ரசிகர் தன்னை கட்டித்தழுவ வந்ததையடுத்து அவரை காவலாளியிடம் இருந்து காப்பாற்றினார் கொலம்பிய அணியின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் அதிரடி காட்டிய ரோட்ரிக்ஸ் ரசிகர்களின் மனதில் ஹீரோவாக விளங்கினார். அதை தொடர்ந்து பணக்கார கிளப் அணியாக விளங்கும் ரியல் மாட்ரிட் அணியில் ரூ. 1200 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் ப்ரீ ஸ்டைலிங் முறையில் அவர் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் போது கொலம்பிய அணியின் உடையை அணிந்து கொண்டு ஒரு ரசிகர் ரோட்ரிக்ஸை நோக்கி ஓடி வந்து அவரை கட்டியணைத்தார்.

இதைப் பார்த்த பாதுகாப்பு காவலாளிகள் அவரை பிடித்து அடிக்க ஆரம்பித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ரோட்ரிக்ஸ் அந்த ரசிகரை அவர்களிடன் இருந்து மீட்டு ஒரு கால்பந்தை வழங்கி அவரை வழியனுப்பி வைத்தார்.

இதை பார்த்த இன்னொரு ரசிகர் பறந்து வந்து ரோட்ரிக்ஸை கட்டியணைக்க அவருக்கும் ஒரு பந்தை வழங்கி அனுப்பி வைத்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &