பிரேசிலில் சமீபத்தில் முடிந்த உலக கோப்பை கால்பந்து தொடர் பைனலில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றது. உலக கோப்பை மாதிரியுடன் தாயகம் திரும்பிய இந்த அணியினருக்கு சிறப்பான வரவேற்பு தரப்பட்டது.
இதில் கேப்டன் பிலிப் லாம், குளோஸ் உள்ளிட்டோர் திறந்த வெளி ‘பஸ்சில்’ உலா வந்தனர். உலக கோப்பை மாதிரியை வீரர்கள் முத்தமிட்டு மகிழ்ந்தனர். இந்நிலையில், இக்கோப்பையில் சேதம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,‘‘ உலக கோப்பை மாதிரியில் சேதம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். தவிர, ஒரு இடத்தில் வெட்டப்பட்டுள்ளது. இதற்காக யாரும் அச்சப்பட வேண்டாம். இதை யார் செய்தார்கள் என்பது குறித்து விசாரிக்க உள்ளோம் ,’’ என்றார்.