கேகாலை மாவட்டத்தில் கண்ணத்தோட்டை ஹஸ்மத்த பிரதேசத்தில் முஸ்லிம் பாடசாலை ஒன்று நிர்மாணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த மதகுருமார்கள் தலைமையில் பாரிய பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது .
கண்ணத்தோட்டை ஹஸ்மத்த சுலைமானிய்யா வித்தியாலயத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் கணிஷ்ட பிரிவுக்கான இடப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் வகையில் குவைத் தூதரகத்தின் நிதியுதவியுடன் புதிதாக கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது.
இக்கட்டிடம் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசத்திலே அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைப்பணிகளில் நான்கில் ஒருபகுதி நிறைவடைந்த நிலையில் கொட்டியகும்புர பிரதேசத்திலிருந்து வந்த பௌத்த மதகுருமார்களே இப்பேரணிக்கு தலைமை தாங்கியுள்ளனர்
இக்கட்டிடமானது பெளத்தர்கள் வாழும் பிரதேசத்திற்கு மிகவும் தூரமான இடத்திலயே அமைக்கப்பட்டுவருவதாக இங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகிறது