BREAKING NEWS

Jun 30, 2014

கிரான்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

நேற்றிரவு இலங்கை நேரம் 8.50 அளவில் கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றினால் பிரதேசத்தில் மாத்திரமன்றி நாட்டின் வேறு பாகங்களிலும் பதட்ட நிலை தோன்றியது. எனினும் குறித்த சம்பவத்திற்கும் இனவாதத்திற்கும் தொடர்பில்லை என்பதையும் குறித்த சம்பவம் போதைப்பொருள் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் எனவும் அவ்வேளையில் தகவல் வெளியிட்டிருந்தோம்.

இத்துப்பாக்கி சூட்டில் இருவர் மரணித்ததுடன் இருவர் காயமடைந்திருந்ததாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவித்திருந்தன. தற்போது துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகிய இருவரும் ஜதின் (37) மற்றும் காவிந்த (26) ஆகிய இரு நபர்கள் எனவும் காயமடைந்த இருவர் சாமர சம்பத் (27) மற்றும் சசி குமார (33) எனவும் அடையாளங்காணப்பட்டுள்ளது.

இதேவேளை இவர்கள் நால்வரும் கிரான்ட்பாஸ் 87வது தோட்டப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &