உலகில் மீண்டும் கிலாபத் ஆட்சி முறையைக் கொண்டுவருவதன் அடிப்படையில் ஆயுதப்போராட்டங்களிலும் பல குழுக்கள் ஈடுபட்டு வரும் நிலையில் ஈராக்கில் அசுர வேகத்தில் முன்னேறி வரும் ISIS போராளிகள் தாம் இதுவரை கைப்பற்றிய பிரதேசங்களை ஒன்றிணைத்து ‘இஸ்லாமிய தேசத்தினை’ பிரகடனப்படுத்தியுள்ளதோடு கலீபா ஆட்சிமுறையையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
குழுவின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளதோடு அவர் கலீபா இப்ராஹீம் என அறியப்படுவார் எனவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை பின்வாங்கிய பகுதிகளை மீளக்கைப்பற்றும் முயற்சியில் ஈராக்கிய இராணுவமும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
