BREAKING NEWS

Aug 18, 2012

அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவிய ரஷ்யா

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலொன்று அமெரிக்க கடற்பரப்புக்குள் நுழைந்து உளவுபார்த்துச் சென்ற சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

குறித்த கப்பலானது அமெரிக்காவின் அனைத்து கண்காணிப்புகளையும் மீறி தனது பணியை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது.

ஏராளமான ஏவுகணைகளோடு அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உலா வந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் அகுலா ரகத்தைச் சேர்ந்த தாக்குதல் கப்பலெனத் தெரிவிக்கப்படுகின்றது.

விளாடிமீர் புடின் மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியான பின்னரே இந்த ஊடுருவல் நடைபெற்றுள்ளதாகத் தெரிகின்றது.

அக்கப்பல் அமெரிக்க கடல் பகுதியை விட்டு வெளியே சென்ற பிறகே இந்தத் தகவல் அமெரிக்க கடற்படைக்கு தெரியவந்துள்ளது.

எனினும் அமெரிக்கா இதனை மறைத்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பலின் நோக்கம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களை அழிப்பது மட்டுமே என இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டில் ரஷ்ய நீர்மூழ்கியொன்று அமெரிக்க கடற்பரப்பில் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &