2012 ஆம் அண்டிற்கான குருநாகல் மாவட்ட கல்பந்தாட்ட சம்மேளன தலைவர் (PRESIDENTS CUP) கிண்ண கல்பந்தாட்ட சுற்றுப்போட்டி திட்டமிடப்பட்டிருக்கின்றது.
குருநாகல் மாவட்டத்திலுள்ள முதன்மைக் கல்பந்தாட்ட அணிகள் 16 இச்சுற்றுப்பொட்டியில் பங்குபற்ற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 7ஆம் திகதி முதல் லீங் முறைப்படி நான்கு குழுக்களாக இவ்வணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன.
இச்சுற்றுப்போட்டியில் வெற்றிபெரும் அணிக்கு வெற்றிக் கேடயத்துடன் 50000 ரூபா பணப்பரிசிலும் இரண்டாமிடத்தைப் பெறும் அணிக்கு கேடயத்துடன் 30000 ரூபா பணப்பரிசிலும் வழங்கப்பட இருப்பதுடன் சிறந்த கோல் காப்பாளர் மற்றும் சிறந்த தொடர் வீரர் அகிய விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றமை கறிப்பிடத்தக்கது.
Aug 18, 2012
குருநாகல் மாவட்ட தலைவர் கிண்ண (PRESIDENTS CUP) கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2012
Posted by AliffAlerts on 02:56 in SL | Comments : 0
