ஹிஜ்ரி 1433 ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்கான மாநாடு இன்று மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு– பெரியபள்ளிவாசலில் அமைந்துள்ள ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இன்று சனிக்கிழமை மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 6.26 மணி முதல் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையைப் பார்க்குமாறும், தலைப்பிறை கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் நேரிலோ அல்லது 011 5234044– 2432110 – 2390783– 0777366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அறியத் தருமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் சகல முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கிறது.