BREAKING NEWS

Aug 18, 2012

ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டது; நாளை நோன்பு பெருநாள்


ஹிஜ்ரி 1433ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பிரதேசங்களில் தென்பட்டுள்ளமையினால் நாளை ஞாயிறுக்கிழமை நோன்பு பெருநாளை கொண்டாடலாம் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று சனிக்கிழமை இரவு அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலிலுள்ள மத்ரஸதுல் ஹமீதியா மண்டபத்தில் இன்று மஃரிப் தொழுகையினை அடுத்து இடம்பெற்ற பிறை தீர்மானிக்கும் மாநாட்டிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதன்போது நாட்டின் பல பிரதேசங்களில் பிறை தென்பட்டதாக உறுதிப்படுத்தலுடன் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் அகில இலஙகை ஜம்இயதுல் உலமா சபையின் பிரதிநிதிகள் கொழும்பு பெரிய பள்ளிவாசலல் நிர்வாக சபையின் பிரதிநிதிகள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பிரதிநிதிகள் ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் பள்ளிவாசல்கள் தக்கீயாக்கல் மற்றும் சாவியாக்கல் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

நோன்புப் பெருநாள் தொழுகை பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலில் பெண்களுக்கு காலை 7.00 மணிக்கும் ஆண்களுக்கு காலை 8.00 மணிக்கும் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாயலில் காலை ஏழு மணிக்கு ஆண் பெண் இருசாராருக்கும் அஸ்ஸலபியா மத்ரஸா மைதானத்திலும் தொழுவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
ALIFFALERTS சார்பாக அனைத்து வாசகர்களுக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...






Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &