BREAKING NEWS

Aug 18, 2012

நிலக்கடலையின் கோது தொண்டையில் சிக்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு


புத்தளம் மாவட்டத்தின் கருவலகவெவ பகுதியில் பதினொரு மாதமேயான குழந்தையொன்று  நிலக்கடலையின் கோது தொண்டையில் சிக்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளது.

கவிசா அனுபாமா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தவ்போவ வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட இக்குழந்தை ஆபத்தான நிலையில் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

பிரேத பரிசோதனை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &