நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது
நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அண்மையில் அளுத்கம, தர்கா நகர்,வெலிப்பன்ன மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
சந்திப்பில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அனைத்து மத தலைவர்களையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டதாக அறிய முடிகிறது
இதன்போது ஒரு சம்பவம் இடம்பெற்றதுடன் இதுபோன்ற கலந்துரையாடல்களை நடத்துவதைவிட நீண்டகால அடிப்படையில் திட்டங்களை முன்னெடுத்து செயற்படுவது அவசியமாகும் என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பில் வலியுறுத்தியதாகவும் அறிய முடிகிறது
இதேவேளை அசம்பாவிதங்கள் இடம்பெற்ற பிரதேசங்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சந்திப்பின்போது உறுதியளித்ததாகவும் அறிய முடிகிறது.