அளுத்கம, பேருவள மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இனவாத வன்முறையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு மற்றும் கணக்கெடுப்பு தொடர்பில் தாம் பெற்ற விபரங்களையும் வழங்கி அரசின் உடனடி நடவடிக்கையைக் கோருவதற்காக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக மு.கா உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன வன்முறைகளை அரங்கேற்றிய அரசின் பங்காளிகளாக மாத்திரமல்லாமல் நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதியாக தொடர்வதற்கு முஸ்லிம் காங்கிரசே வழி சமைத்ததாக அக்கட்சி கூறி வருகின்ற அதேவேளை அரசை விட்டு வெளியேற வேண்டுமென கட்சிக்குள் அழுத்தங்களும் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த சந்திப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான ஒரு அரசில் அங்கம் வகிப்பதையிட்டு தான் வெட்கப்படுகிறேன் என அண்மையில் கட்சியின் தலைவர் ரவுப் ஹகீம் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.