கொழும்பின் புறநகர் பகுதியான அளுத்கமையில் பொலிஸார் வித்தியாசமான சட்டத்தை அமுல்படுத்துவதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியுள்ளது. தானசாலையில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அளுத்கமையில் உள்ள பொலிஸ் அதிகாரிகளில் பலர் பள்ளிவாசல்களின் பக்கமே செயற்படுகின்றனர். எனவே தாக்குதலுக்கு உள்ளான பௌத்த பிக்குவை அமைதியாக இருக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதாக பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சில முஸ்லிம்கள் தம்மை பொது பல சேனா தாக்கவேண்டும் என எதிர்பார்த்து இருக்கிறார்கள் இதன்மூலம் பாரிய நாடகம் ஒன்றை அரங்கேற்றுவதற்கு முஸ்லிம்கள் தயாராக இருந்தாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் பள்ளிவாசல்களுக்கு ஆதரவாக செயற்படும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில் பௌத்த பிக்கு ஒருவரின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்யர்களுக்கு நெருக்ககமான தகவல்கள் தாம் பிக்குவை தாக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. எனினும் கடுமையான வார்த்தை பிரயோகங்களை பிக்குவிடம் வெளியிட்டதாக தெரிவித்துள்ளது
இதனையடுத்தே பௌத்த பிக்கு பொய்யான முறைப்பாட்டை பொலிஸில் மேற்கொண்டுள்ளதாக குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
இணைப்பு:2
நாளை அலுத்கமயில் பொது பல சேனா ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாதத்த திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப் படுகிறது. அதேவேளை அலுத்கமயில் பெளத்த பிக்குவை தாக்கியதாக குற்றம் சாட்டப்படும் மூவரும் தீவிரவாதிகள் என்று முஸ்லிம்களே தெரிவித்ததாக பொது பல சேனாவின் தகவல்கள் குறிப்பிடுகிறது.
The controversy which arose in Aluthgama has demonstrated that the Police follow a “different law” in areas where there is a Muslim majority, General Secretary of Bodu Bala Sena Galagodaaththe Gnanasara Thera said.
