ஜகார்தா, மே.2-
கிழக்கு இந்தோனேஷியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
எனினும் இதன் காரணமாக சுனாமி உருவாகும் வாய்ப்பு ஏதுமில்லை என அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இன்று மாலை 4.30 மணியளவில் தென்கிழக்கு நமெலாவில் உள்ள மலுக்கு தொடர் தீவுகளில் 54 கி.மீ துரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி கடலுக்குள் இருந்தபோதிலும், அந்நாட்டின் பிற நகரங்களான அம்பான், நம்லியா மற்றும் நம்ரோல் ஆகிய பகுதிகளில் இதன் தாக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரியான டிரை ஹந்தாயானி கூறியுள்ளார்.