BREAKING NEWS

May 2, 2014

ஆப்கான்: மழை காரணமாக கடும் நிலச்சரிவு

ஆப்கானிஸ்தானின் பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் அங்கு வசித்த 2000 பேரை காணவில்லை எனவும் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

இதுகுறித்து பதக்சான் மாகாண கவர்னர் ஷா வலியுல்லா அதீப் கூறியதாவது:- 

கடுமையான மழை காரணமாக மலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்த 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த நிலச்சரிவில் மண்ணில் புதைந்துள்ளன. இதில் வசித்த 2000-த்திற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. இதில் மொத்தம் உள்ள வீடுகளில் 75 சதவீத வீடுகள் புதைந்துள்ளன. 

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் போதுமான கருவி மற்றும் மண் தோண்டும் கருவிகள் இல்லாததால் அவர்களால் வேகமாக பணியைச் செய்ய முடியவில்லை. 

இவ்வாறு அவர் கூறினார். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &