இன்றைய
கால தாய்மார்களும் பொதிந்திருக்கும் தாய்ப்பாலின் பெறுமதிமிக்க இரகசியங்களும்
By Dr. Fazl-Ul
Haque M Fouze [Unani Physician]
மனித
குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே
மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின்
முழுமையான உடல் மற்றும் மன
வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் ஆகும்.
ஆனாலும்
இன்றைய காலகட்டத்தில் எமது அநேகமான
தாய்மார்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி தமது செல்லக் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை
ஓரிரு மாதங்களிலேயே தவிர்த்துவிடுகின்றனர். அவற்றுள் பிரதானமானதாக அவர்கள் தெரிவிக்கும்
காரணி தமது அழகு குறைந்துவிடும் மற்றும் தமது உடல் எடை அதிகரித்துவிடும் என்பனவாகும்.
இன்று சர்வதேச அளவில் ஐந்து வயது
குழந்தைகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள்
வரையில் தாய்ப்பால் புகட்டப்படாமல், ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றன.
தாய்ப்பாலானது,
குழந்தைகளுக்கு சாதாரண உணவு மட்டுமன்றி
அவர்களது உடல், உள மற்றும்
உணர்வு ரீதியான வளர்ச்சி மற்றும்
மேம்பாடு என்பவற்றில் துணைபோகக்கூடிய மதிக்க முடியாத பொக்கிஷமாகும். தாய்ப்பாலை குழந்தைக்கு தொடர்ச்சியாக பிரத்தியேகமான உணவாக
முதல் 6 மாத காலத்துக்கு வழங்கவேண்டியது கட்டாயமாவதுடன் ஆறு மாதங்களின் பின்னர்
குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கும் அதேவேளையில் படிப்படியாக ஏனைய உணவு வகைகளுக்குப்
பழக்குவது முக்கியமாகும்.
எனினும் தாய்ப்பால் வழங்குவதை ஒரு வருட பூர்த்தியின் பின்னர்
தேவைப்படி ஒன்றரை வருடங்கள் அல்லது இரண்டு வருடங்கள்
வரை உணவு வேளையாக அன்றி தேவைப்படும் பட்சத்தில் (உதாரணமாக: குழந்தை அழும் போது அல்லது குழந்தையை தூங்க வைப்பதற்காக) வழங்குவது சிறந்ததாகும். அத்துடன் முதல் 6 மாதங்கள் கடந்ததும்
குழந்தைக்கு உணவுப் பழக்கத்தை படிப்படியாக பழக்கும் போது கட்டாயம் குழந்தையின்
ஆரோக்கியம் பற்றி கவனம் செலுத்துவது
கட்டாயமாகும்.
ஒரு
தாய் தமது குழந்தைக்கு தொடர்ச்சியாக
6 மாத காலத்துக்கும் அதனைத் தொடர்ந்து இரண்டு
வருடங்கள் வரை தேவைப்படி தாயப்பாலை
வழங்குவதனால் நிச்சயமாக ஒருபோதும் தாய்க்கு கெடுதியோ அல்லது அழகுப் பிரச்சினையோ
அல்லது உள ரீதியான சிக்கல்களோ
ஏற்படப்போவதில்லை. அதற்குப் பகரமாக தாய் மென்மேலும்
இளமையை தக்கவைத்துக்கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டுகின்றது
ஆகவே
அனைவரும் தாய்ப்பாலின் நலன்களை அறிந்து, அதை
பற்றிய விழிப்புணர்வு பெறுதல் அவசியமாகிறது. குழந்தைக்கு
தேவையான விட்டமின் மற்றும் சத்துகளோடு, குழந்தையின்
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு
சக்தியும் தாய்பாலிலேயே அதிகம் இருக்கிறது.
ஆகவே
இப்போது தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், குழந்தைக்கும் எவ்வளவு சிறந்தது என்று
பார்ப்போம்.
சந்தோஷத்தைக் கொடுக்கும்
தாய்ப்பால்
புகட்டுவது தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட உடல் மாற்றங்களில்
இருந்து மீள்வதற்கு உதவுகிறது மற்றும் குழந்தை பிறக்கும்
போது ஏற்பட்ட வலியை மறந்து,
குழந்தையை மகிழ்ச்சியாக கொஞ்சவும் வழி செய்கிறது.
பழைய நிலையை அடைய உதவும்
பழைய நிலையை அடைய உதவும்
கர்ப்பிணிகளுக்கு
கர்ப்பக் காலத்தில் கருப்பையில் மாற்றம் ஏற்படும். குழந்தை
பேற்றிற்கு பின் கருப்பை மீண்டும்
அதன் பழைய நிலையை அடைய
தாய்ப்பால் உதவுகிறது.
இரத்த இழப்பை சரிசெய்யும்
இரத்த இழப்பை சரிசெய்யும்
தாய்ப்பால்
புகட்டுவது குழந்தை பேற்றின் போது
ஏற்பட்ட இரத்த இழப்பை சரிசெய்து,
அது சம்மந்தமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
மாதவிடாயை தாமதப்படுத்தும்
மாதவிடாயை தாமதப்படுத்தும்
தாய்ப்பால்
புகட்டுவது குழந்தை பேற்றிற்கு பின்
தாய்மார்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது. அதாவது பெண்களின் கருப்பையில்
கரு முட்டை உருவாவதை ஆரோக்கியமான முறையில் தாமதிக்கிறது. இதனால் தாய்க்கு எவ்வித
பாதிப்பும் எக்காரணத்தைக்கொண்டும் ஏற்படப்போவதில்லை. அதற்குப் பகரமாக இல்லற
வாழ்க்கையில் பல்வேறு நன்மைகளை அனுபவிக்கும் சந்தர்ப்பமும் தம்பதியினருக்கு கிடைக்கின்றது
(முதல் 3-4 மாதங்களில்)
உளவியல் ரீதியான பிணைப்பு
தாய்ப்பால்
புகட்டுவதால் தாய்க்கும், குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல்,
உளவியல் ரீதியாகவும் பிணைப்பு ஏற்படும்.
சுயமரியாதை அதிகமாகும்
சுயமரியாதை அதிகமாகும்
தாய்ப்பால்
கொடுப்பதால், அது தாயிடத்தில் சுய
மரியாதையை ஊக்குவிக்கிறது.
புற்றுநோயை தடுக்கும்
இன்றைய
சமூகத்தில் பெண்கள் அதிகளவில் அவதிப்படக்கூடிய ஒரு நோயாக மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயை
குறிப்பிடலாம் உண்மையிலேயே அதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தாலும் எமது தாய்மார்களது
பழக்கவழக்கங்களுடன் அவர்கள் முறையாக தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்காமை பிரதான
காரணிகளில் ஒன்றாகும். எனவே முறையாக தமது குழந்தைகளுக்கு
தாய்ப்பாலை உரிய காலத்துக்கு புகட்டுவதன் மூலம் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்
ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கின்றது
எடை குறைய உதவும்
பொதுவாக
தாய்மார்கள் குழந்தைப்பேற்றின் பின்னர் அதிகளவில் பருமனடைவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
இதனை இலகுவாக குறைத்துக்கொள்ளவும் உதவக்கூடிய ஒரு முறையாக குறித்த காலத்துக்கு பூர்த்தியாக
தாய்ப்பாலை குழந்தைக்கு வழங்குதலைக் குறிப்பிடலாம்.
குழந்தை இலகுவில் நோய்வாய்ப்படும் அளவு வெகுவளவில் குறைவடையும்
குழந்தை இலகுவில் நோய்வாய்ப்படும் அளவு வெகுவளவில் குறைவடையும்
இன்று
எமது குழந்தைகள் வெகுவாக நோய்வாய்ப்படுவதற்கான பிரதான காரணம்
எமது தாய்மார்கள் இலகுவிற்காக பால் மா வகைகளை
ஆரம்பத்திலே குழந்தைக்கு வழங்குவதுடன் குழந்தைக்கு நோயெதிர்ப்பினை பெற்றுக்கொடுக்கும் தாய்ப்பால் வழங்குவதை நிறுத்துவதாகும்.
ஆகவே
தான் குழந்தை வெகு விரைவில்
நோய்வாய்ப்படுகின்றது. தாய்ப்பாலை முறையாகவும் பூர்த்தியாகவும் குறிப்பிட்ட காலம் வரை கொடுப்பதனால்
குழந்தையை ஆரோக்கியமான குழந்தையாகவும் போஷாக்குமிக்க குழந்தையாகவும் வளர்தெடுக்கும் சந்தர்ப்பம் கிட்டுகின்றது. அதுமட்டுமன்றி தேவையற்ற செலுவுகளும் அதிகளவில் குறைவடைக்கின்றது.
எளிமையான வேலை
தாய்ப்பால்
புகட்டுவதால் உணவு வழங்கும் உபகரணங்களை
கழுவி, சுத்தப்படுத்தி, தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற
அவசியம் இல்லை.
எளிய உணவு
எளிய உணவு
தாய்ப்பால்
மிகவும் சிக்கனமானதும் கூட. எப்படியெனில் செயற்கையாக
ஆரோக்கிய உணவுகள் புகட்ட முற்படுதல்
அதிக செலவை ஏற்படுத்தும். மேலும்
அது சராசரி குடும்ப செலவில்
மூன்றில் ஒரு பங்கு செலவு
பிடிக்கும்.
சகலவிதமான நோய்களுக்கும் எவ்வித பக்கவிளைகளுமற்ற நேர்த்தியான சிகிச்சைகளுக்கு
Sinaam Medicare
Assalafiyya Shopping Complex
Kandy Road,
Assalafiyya Shopping Complex
Kandy Road,
Paragahadeniya, Kurunegala.
Tel : 0374 982 659
Mob : 0717 367 287