இன்று அதிகாலை பொல்கஹவெல கிரம்பே ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் அதிகாலை 2.00 மணிமுதல் குரனாகளில் இருந்தான சகல ரயில் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
அண்மையில் பொத்துகறையில் விபத்துக்குள்ளாகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த தெயட்ட கிருல ரயிலை கொழும்புக்கு எடுத்துச்செல்லும் வேளையில் கிராம்பே ரயில் நிலையத்துக்கு அருகில் குறித்த ரயில் தடம் புரண்டதால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக வவுனியா, பளை, மட்டக்களப்பு, ஆகிய தூர ரயில்கள் குருநாகலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 4:20AM மஹவ பாணத்துறை, 5.40AM மஹவை கொழும்பு அலுவலக ரயில் சேவை மற்றும் 6.20AM குருநாகல் கொழும்பு ரயில் சேவையும் தடைப்பட்டுள்ளது.
இதன் விளைவாக சுமார் 5000 பேருக்கு அதிகமானவர்கள் குருநாகல் ரயில் நிலையத்தில் காத்திருந்ததை காணமுடிந்தது.
ரயில் நிலைய அதிகாரி ஒருவரின் கருத்துப்படி 7:45 மணிக்குள்ள மாத்தறை ரயில் மற்றும் 8:45 வவுனியா கொழும்பு கடுகதி ரயில் சேவையும் தடைப்படலாம் எனத்தெரிவித்தார்.
அத்துடன் மேலும் இரண்டு ரயில் வண்டிகள் வெல்லவை ரயில் நிலையத்தில் நிருத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.







