இன்று காலை வங்கதேசத்தில் கட்டிடம் ஒன்றின் மொட்டை மாடியில் இருந்து கிழே விழுந்து இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வபாத்தாகியுள்ளார்.. இலங்கையின் குருநாகலை மல்லவபிடிய பிரதேசத்தை சேர்ந்த இஷான் இர்பான் (இருபத்திமூன்று வயது) என்ற இளைஞரே குறித்த சம்பவத்தில் வபாத்தாகியுள்ளார்.
வங்கதேசத்தில் சிட்டகொங்கில் அமைந்துள்ள University of Science & Technology Chittagong (USTC) பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் கடைசி வருடத்தில் கல்வி கற்று வந்த இஷான் இர்பான் இன்று காலை வங்கதேசத்தில் போயஸ் லேக் எனும் வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றின் ஆறாம் தளத்தின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளதாக மருத்தவ கல்லூரி மருத்துவமனை அறிவித்துள்ளது.
குருநாகல் மல்லவபிட்டியவை சேர்ந்தவரும் தற்போது போட்ஸ்வானாவில் தனது பாரியார் சகிதம் தொழில் புரிந்து வரும் ஜனாப் .இர்பான் அவர்களின் புதல்வரான இஷானின் இரு சகோதரர்களும் வெளிநாட்டில்(சீனா,மலேசியா)வசிப்பது குறிப்பிடத்தக்கது.இர்பானின் ஜனாஸா நல்லடக்கம் வங்கதேசத்தில் இடம்பெறும் என மடவளை நியுசுக்கு அறியக்கிடைத்தது