BREAKING NEWS

Apr 7, 2014

மதீனாவில் தமிழ் பேசும் மக்களுக்கான இஸ்லாமிய ஒன்று கூடல்

                           

எதிர்வரும் வெள்ளிக்கிழமை புனித மதீனா மாநகரில் தமிழ் பேசும் மக்களுக்கான இஸ்லாமிய ஒன்று கூடல் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வேலை மற்றும் கல்வி நிமித்தம் புனித மதீனா மாநகரில் தங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மற்றும் தனி நபர்களுக்கே இவ்வொன்று கூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சன்மார்க்க சொற்பொழிவூ நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது ஏனைய இஸ்லாமிய கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குர்ஆன், ஹதீஸ்இ பிரார்த்தனை மனனப் போட்டிகள் போன்ற இன்னோரன்ன போட்டி நிகழ்ச்சிகள் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்ச்சிகள் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் எனத் தனித்தனியாக எல்லோரும் பங்குபற்றும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சவூதி அறேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் அனுசரணையூடன், மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர் தஃவாக்குழு மற்றும் மதீனா தமிழ் மொழி தஃவாக் குழு ஆகியவை இணைந் துநடாத்தும் நிகழ்ச்சியாக இது அமையவிருக்கிறது.

மதீனா வாழ் தமிழ் பேசும் குடும்பத்தினருக்காக நடாத்தப்படு;ம் இம்மூன்றாவது இஸ்லாமிய ஒன்றுகூடலில் உங்கள் வரவால் ஏற்படும் எழுச்சியின் நன்மையைத் தவரவிடவேண்டாம். எனவே மனைவி மக்கள் நண்பHகள் சகிதம் கலந்து ஈருலக வெற்றியடையூமாறு அன்புடன் அழைக்கின்றௌம். வருக! வருக! பயன் பெறுக!

                

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &