BREAKING NEWS

Apr 6, 2014

மஹெல, சங்கா வெற்றிக் கிண்ணத்துடன் விடை பெறுவார்களா?

மஹெல, சங்கா வெற்றிக் கிண்ணத்துடன் விடைபெறுவார்களா?

5-வது இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகிறது. 

சுப்பர் 10 சுற்றில் இருந்து இந்தியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. 

அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இலங்கை அணியும், தென்னாபிரிக்காவை தோற்கடித்து இந்திய அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. 

இந்த நிலையில் இந்தத் தொடரில் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத இந்திய அணி இன்று இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்ளவுள்ளது. 

முன்னதாக 2007ம் ஆண்டு கிண்ணத்தை சுவீகரித்த இந்திய அணி, இம்முறை 2வது தடவையாக வெற்றிக்கனியைப் பறிக்கும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியுள்ள அதேவேளை, இருமுறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து (2009 மற்றும் 2012) கிண்ணத்தை தவறவிட்ட இலங்கை அணியும் இம்முறை அதிக ஆவலுடன் களமிறங்கும் என்பதில் ஐயமில்லை. 

அத்துடன் இலங்கை அணியின் இரு முக்கிய வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹெல ஜெயவர்த்தன ஆகியோர் இந்தத் தொடருடன் 20க்கு இருபது போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்தப் போட்டி இலங்கைக்கு மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. 

அதுமட்டுமல்லாது இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரிக்கின்ற நிலையில் விஷேட கொடுப்பனவுகள் வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை முன்னதாக குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &