இலங்கையில் வருடத்திற்கு சுமார் 40,000 - 50,000 வாகன விபத்துக்கள் இடம் பெறுகின்றன, சுமார் 2000- 3000 பேர்கள் விபத்துக்களில் இறந்து விடுகிறார்கள், ஒருநாளைக்கு சுமார் 5-6 பேர்கள் விபத்துக்களில் சிக்கி இறந்து விடுகின்றனர.
41% உயிராபத்துள்ள விபத்துக்கள் மற்றும் 61% விபத்துக்கள் மேல் மாகாணத்திலேயே இடம்பெறுகின்றன.
18% முச்சக்கர வண்டிகளும் 17% பஸ் வண்டிகளும் 16% வான்களும் 12% மோட்டார் சைக்கிள்களும் 6% கார்களும் விபத்துக்களில் சிக்குகின்றன.
விபத்துக்களில் சிக்கும் ஆட்களில் 38% பாதசாரிகள் 26% பயணிகள் 14% துவிச்சக்கர வண்டி பயணிகள் 12% மோட்டார் சைக்கிள் பயணிகள் 10% சாரதிகள் ஆவர்.
குடும்பங்களின் பேரிழப்புக்களுக்கு அப்பால் அரசாங்கம் வருடம் தோறும் 10,000 சிகிச்சைகள் பொலிசார் சேவை சட்ட சேவைகள் என பல்வேறு விடயங்களுக்காக செலவிடுகிறது.
இன்று இலங்கையில் அதிகரித்து வரும் வாகனங்கள், அபிவிருத்திகாணும் அதிவேக பாதைகள் விபத்துக்களின் அதிகரிப்புக்கும் காரணமாயிருந்தாலும், பொதுமக்களின் விழிப்புணர்வு இன்மை, சாரதிகளின் கவனஈனங்கள், மது போதை வஸ்துக்களின் பாவனை, போக்குவரத்து சட்டவிதிகளின் குறைபாடுகள் என பல்வேறு காரனகள் இருக்கின்றன.
இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கல்விமான்கள், நிறுவனங்கள், மததலைவர்கள்,பல்களைக்கழக சமூகத்தினர் தமது பங்களிப்பை செய்தல் வேண்டும்,தொற்று மற்றும் தொற்றா நோய்களைவிடவும் கூடுதலான உயிர்ப்பலி மற்றும் மருத்துவ செலவினங்களை வாகன விபத்துக்கள் ஏற்படுத்துகின்றன.
குடும்பங்களின் பேரிழப்புக்களுக்கு அப்பால் அரசாங்கம் வருடம் தோறும் 1000 கோடி ரூபாய்களை சிகிச்சைகள் பொலிசார் சேவை சட்ட சேவைகள் என பல்வேறு விடயங்களுக்காக செலவிடுகிறது.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் பொழுது தனது வபாத்தான சகோதரர், அவரை அழைத்துவரச் சென்று வபாத்தானவர்கள் என விபத்துகளில் சிக்கி வபாத்தான அனைவரது பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து அவர்களது நற்கருமங்களை அங்கீகரித்து உயர்ந்த சுவன வாழ்வை எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்வானாக...
அவர்களை இழந்து தவிக்கும் தாய் தந்தையர் உடன் பிறப்புக்கள் உற்றார் உறவினர் எல்லோருக்கும் எனது தனிப்பட்டதும் குடும்பத்தினரதும் நண்பர்களினதும் ஆழ்ந்த அனுதாபங்களையும் பிராத்தனைகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.