BREAKING NEWS

Mar 21, 2014

குருநாகல் பஸ் நிலையத்தில் அநாதரவான நிலையில் சிசு

குருநாகல் மத்திய பஸ் நிலையத்தில் தனியார் பஸ் ஒன்றில் இருந்து அநாதரவான நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பிறந்து 7 நாட்களே ஆன ஆண் சிசு ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

பயணிகளை இறக்கிவிட்டு தரித்து நின்ற பஸ்ஸில் சிசுவின் அழுகுரல் கேட்டுள்ளது.

இதனையடுத்து சென்று பார்த்தவேளை சிசு பஸ் ஆசனத்தில் அநாதரவாகக் கிடந்துள்ளது.

இது குறித்து குருநாகல் பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கப்பட்ட பின் பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து சிசுவை மீட்டு குருநாகல் வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

சிசுவை அநாதரவாக விட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &