தற்போது 30 விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம் பெற்றுள்ளனர். இதன் மூலம் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் 3வது உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு சீனா வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.
சீனாவின் விமான தயாரிப்பு நிறுவனமான கோமாக், குறுகிய வடிவமைப்புடனான பயணிகள் விமானத்தை தயாரித்து சாதனை படைத்துள்ளது. இந்த விமானத்தில் ஆபத்துக்களை உணர்த்தும் கருவிகள் பொறுத்துப்பட்டுள்ளன.
2008ம் ஆண்டு முதல் இந்த விமானத்தை தயாரிக்கும் பணியில் கோமாக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு சிறப்பு அம்சங்களைக் கொண்ட சி 919 ரக விமானங்கள் குறைந்த விலை கொண்டவை.
பல கட்ட ஆய்வுகள் முடிந்து தயார் நிலையில் உள்ள இந்த விமானங்கள் 2015ம் ஆண்டு வெள்ளோட்டம் விடப்பட உள்ளன.